காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

காங்கயத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸார் அணிவகுப்பு.!

காங்கயத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸார் மற்றும் காங்கயம் போலீஸார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் தேர்தலில் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை மற்றும் காங்கயம் போலீஸார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை காங்கயம் காவல் ஆய்வாளர் அருண் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த அணிவகுப்பு ஊர்வலம் மெயின்ரோடு, காவல் நிலைய ரவுண்டானா, தாராபுரம் சாலை வழியாகச் சென்று, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் 60-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸார் மற்றும் காங்கயம் போலீஸார் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *