ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ98500 பறிமுதல் துறையூரில் பறக்கும் படையினர் அதிரடி

துறையூர் மார்ச் -17
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ98,500 பறிமுதல் செய்தனர்.தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இன்று (17-03-2026) துறையூர் அருகே உள்ள கண்ணனூர் பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சசிகுமார் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் சத்திய விநாயகம், காவலர்கள் முனிராஜ், லாவண்யா ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்றை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ98,500 ரொக்கம் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் கரூர் மாவட்டம் கருப்பகவுண்ட புதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூபாய் 98,500ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து துறையூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறனிடம் ஒப்படைத்தனர்.

அப்போது வட்டாட்சியர் சிவக்குமார் உடன் இருந்தார்.துறையூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த முதல் சம்பவம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *