வடலூர் போலீசார்,போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் உத்திரவின் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வடலூர் பஸ்நிலையத்தின் அருகில் தோளில் மாட்டும் பையினை மாட்டிக்கொண்டு நின்ற, இரு நபர்களை பிடித்து
விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியதையொட்டி, வடலூர் காவல் நிலையம் கொண்டு வந்து தொடர்விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வானாதிராயபுரம், தென்குத்து ராமலிங்கம் மகன் ஆட்டுக்கால் என்கிற பிரகாஷ் (35) மற்றும்மருங்கூர் கந்தசாமி மகன் குமார் என்கிற குமாரசாமி (32), எனவும், தோளில் மாட்டிகொண்டுஇருந்த 3 பைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை
(ஹான்ஸ்) பொருட்கள், 36 கிலோ எடையுள்ள,120 பொட்டலங்கள் இருந்தது,இதனை இருவரும் பெங்களூர் சென்று குறைந்த விலையில் வாங்கி வந்து,அதிக விலைக்கு, விற்கஇந்தபுகையிலைப் பொருளை நெய்வேலி அருகே வடகுத்து
மெயின் ரோட்டில் உள்ள, ஒரு மளிகை கடைக்கு கொண்டு செல்லும்போது பிடிப் பட்டனர்,
விசாரணையில் தெரிய வந்தது,இதனைத் தொடர்ந்து குமாரசாமி, பிரகாஷ் இருவரையும், கைதுசெய்து, வழக்கு பதிவுசெய்து,
குறிஞ்சிப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.