தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் தலைமை வகித்தார் உப தலைவர் எஸ் ஞானவேல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

போடி தர்மத்துப்பட்டி ஏ .எச்.எம். டிரஸ்ட் இயக்குனர் ஸ்டெல்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்று நவீன சமூகத்தில் பெண்களின் உரிமைகளும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் பெண்களுக்கான உரிமைகள் குறித்தும் பெண் களுக்கு ஆதரவாக சட்ட உதவிகள் குறித்தும் விரிவாக விளக்கி பேசினார்

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் தனித் திறன்களை மேம்படுத்தும் வகையில் நடனம் ஓவியம் பாட்டு பேச்சு ஒளிப்பதிவு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

இதனைத் தொடர்ந்து மாணவிகள் பல்வேறு பெண் ஆளுமைகளின் தோற்றத்தில் பங்கேற்ற அணி வகுப்பு நடைபெற்றது மேலும் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் வெ. அலமேலு நடுவராக பங்கேற்று பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்படுகிறதா அல்லது எடுக்கப்படுகிறதா என தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது உதவி பேராசிரியை ஆர்.ரோகினி அறிமுக உரையாற்றினார்

முன்னதாக கல்லூரியின் உதவி பேராசிரியர் எஸ். விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார் உதவி பேராசிரியர் எம் சுமையாபானு நன்றி கூறினார் இந்த விழாவிற் கான ஏற்பாடுகளை கல்லூரி மகளிர் மைய ஏற்பாடுகளை வெகு சிறப்பாக செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *