கும்பகோணம் மார்ச் 20-
கும்பகோணம் இஸ்லாமியர்கள் சார்பில் ரமலான்
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சீமாட்டி ரெடிமேட்ஸ் நிர்வாக இயக்குநர் முகம்மது ஜியாவுத்தீன் தலைமை தாங்கினார்.சீமாட்டி சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் பஷீர் அகமது, குறிஞ்சி பிர்தவுஸ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சமுதாய புரவலர் சாகுல் ஹமீது கலந்து கொண்டார்.அப்போது சமூக நல்லிணக்கம் மற்றும் அர்ப்பணிப்புபணிகளை செய்து வரும் சமுதாய சேவைகளை பாராட்டி தொழில் அதிபர் சாகுல் ஹமீதுக்கு நாஸிருல் மில்லத் விருதினைசீமாட்டி ரெடிமேட்ஸ் நிர்வாக இயக்குநர் முகம்மது ஜியாவுத்தீன் ஜியாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம்
சார்பில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கிஸ்வா தலைவர் கமல் பாட்சா, செயலாளர் முகமது அஜீஸ், நிர்வாகிகள் அன்சர் அலி, வக்கீல் சுபுஹான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.