தாராபுரம் செய்திகளால் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் மூலனூர் போலீசார் 20 பேர் கொண்ட குழு ராணுவத்தினர் 51 நபர்கள் இணைந்து கொடி அணிவகுப்பை மேற்கொண்டனர்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் துணை ராணுவப் படையினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதன் முன்னோட்டமாக மூலனூரில உள்ள காவல் நிலையம் முன்பு நடந்த கொடி அணி வகுப்பிற்கு ஏ.எஸ். பி ஆறுமுகம் தலைமை வகித்தார். தாராபுரம் டி.எஸ்.பி சிவகுமார், மூலனூர் இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தன், குண்டடம் விவேக், தாராபுரம் ராமச்சந்திரன், டிராபிக் இன்ஸ்பெக்டர் சஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை ராணுவ படையினர், சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் கொடி அணிவிப்பை மூலனூர் காவல் நிலையம் முன்பு துவங்கிய பேரணியை மூலனூர் கடைவீதி வஞ்சியம்மன் கோவில் வழியாக பேருந்து நிலையம் சென்றடைந்து மீண்டும் காவல் நிலையத்தை வந்தடைந்தனர்.