திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் பழைய டயர் கம்பெனியின் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். இருப்பினும், தீ கொழுந்து விட்டு எரிந்ததால், ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரத்தில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைக்கும் பணி வெற்றிகரமாக முடிந்தது.
மண்னை
க.மாரிமுத்து.