தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடத்தில் 12D தபால் வாக்கு படிவங்கள் வழங்கல்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான 12D தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்பட்டன.

வாக்குசாவடி நிலை மேற்பார்வையாளர் சந்திரசேகர் அவர்கள் தலைமையில், குண்டடம் முழுவதும் வீடு தோறும் சென்று தகுதியான வாக்காளர்களுக்கு Form 12D வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்குச்சாவடிக்கு நேரில் வர இயலாத வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் தங்களது வாக்குரிமையை பயன்படுத்திக் கொள்ள இந்த படிவம் உதவுகிறது.

படிவம் பெற்ற வாக்காளர்கள் அதை சரியாக நிரப்பி, சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், தபால் வாக்கு பதிவு செய்யும் முறைகள் குறித்தும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் வாக்களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கை, தேர்தல் ஆணையத்தின் முக்கிய முயற்சியாகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *