தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நீரோடை மற்றும் புறம்போக்கு பகுதிகள் தனியார் சோலார் மின்கன்பங்கள் அனுமதி இன்றி அமைப்பதை தடுக்க தாலுக்கா அலுவலகத்தில் மனு .
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் காளிமுத்து பொதுமக்கள் மனு வாங்க ஆள் இல்லாததால் மனுவை கிழித்தெறிந்து சுருட்டி வீசினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நந்தவனம் பாளையம் ஊராட்சியில் மானூர்பாளையம் ,தொட்டியதுறை, கள்ளிவலசு, சின்னாரிபாளையம், நாவிதன்புதூர் மற்றும் நிறைவு உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் உள்ள நீரோடை மற்றும் புறம்போக்கு இடங்களில் தனியார் சோலார் நிறுவனம் மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்படும் மின் கம்பங்கள் நீரோடையில் கட்டியுள்ள தடுப்பணைகளையும், மயான இடங்களையும் சேதப்படுத்தி மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அரசுக்கு பல லட்ச ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. நீரோட்டில் அமைக்கும் மின்கம்பங்கள் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கத்தில் மின் கம்பங்கள் உடைந்து விழுந்தாலும் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களும் கால்நடைகளும் சிறு உயிரினங்களும் எந்த நேரத்திலும் பேராபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதனால் நீரோடை மற்றும் புறம்போக்கு இடங்களில் உரிய அனுமதியின்றி நீரோடை புறம்போக்கில் தனியார் சோலார் மின்கம்பங்கள் அமைப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நந்தவனம் பாளையம் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்களுடன் ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் காளிமுத்து தாலுக்கா அலுவலகத்தில் மனுவை பெற்றுக்கொள்ள யாரும் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்த பின்னரும் புகார் பெட்டியும் வெளியில் வைக்காத காரணத்தினால் மனுவை வாங்க ஆள் இல்லாததாலும் மனுவை கிழித்தெறிந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது தேர்தல் பணி இடைவெளியில் தாசில்தார் மனு அளிக்கப்பட்டது