மதுரை காமராஜர் பல்கலைக்கழ சுத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இணைவு பெற்று செயல்படும் இந்த கல்லூரி கடந்த 2023-ம் ஆண்டு முதல் இரு பாலர் கல்லூரியாக மாற்றப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.
இருப்பினும், தற்போது வரை அந்தக் கல்லூரியில் படித்து முடித்த மாணவர்களுக்கு வழங்கப்ப டும் சான்றிதழ்களில் மகளிர் கல்லூரி என்று பதிவிட்டே வழங்கப்படுகிறது எனவும், இந்த பிரச்சனைக்கு பல்கலைக்கழகம் தீர்வு காண வேண்டியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தில் விருதுநகர் மாவட்டச்செயலர் ஆனந்த கண்ணன் தலைமை வகித்தார். மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டீலன் ஜென்டின், மாவட்டச் செயலர் டேவிட் ராஜதுரை, மாநிலக் குழு உறுப்பினர் தீபலட்சுமி புறநகர் மாவட்டச் செயலர் சுதர்சன், மாணவர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.