மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வலையபட்டி
ஸ்ரீ மஞ்சமலை அய்யனார் கோவிலில் தென்னக கரும்பு விவசாயிகள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை உடனே இயக்க வலியுறுத்தி சங்கத்தின் தலைவர் நல்லமணிகாந்தி, தலைமையில் நிர்வாகிகள்அழகர்சாமி, தங்கராஜ்.ராமமூர்த்தி, செல்லமுத்து, ஆகியோர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கடந்த 2021ம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைந்தால் தேசிய கூட்டுறவு சக்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க. ஸ்டாலின் வாக்கு கேட்டுவிவசாயிகளின் ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்றார். ஆனால் ஆட்சி ஐந்தாண்டுகள் முடிவடைந்தும் ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது

ஆட்சியில் அமரும் ஆட்சியாளர்கள் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அதனை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களை காக்க இந்த ஆலையை இயக்க வேண்டும் மற்றும் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையும் மற்றும் பணியாளர்களின் சம்பள பாக்கியத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக மஞ்சமலை அய்யனார் கோவிலில் தேங்காய் பழம் மாலை சந்தன குங்குமம் மற்றும் பொங்கல் வைத்து வழிபட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கினர். இந்த வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை தென்னக கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *