தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி: குண்டடத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் இன்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குண்டடம் காவல் நிலையம் அருகே தொடங்கிய இந்த பேரணி, குண்டடம் நில வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், சங்கரண்டாம்பாளையம் நில வருவாய் ஆய்வாளர் துர்கா சங்கர் மற்றும் குண்டடம் கிராம நிர்வாக அலுவலர் பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

“வாக்களிப்பது சிறந்தது – நிச்சயமாக அளிப்போம்” என்ற கோஷத்துடன் தொடங்கிய இப்பேரணி, வரவிருக்கும் தாராபுரம் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-இல் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது மேட்டுக்கடை வி.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த பேரணி, குண்டடம் பேருந்து நிலையத்தில் தொடங்கி, பேரூராட்சி அலுவலகம் வரை சென்று, பின்னர் மீண்டும் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

இப்பேரணியில் 110-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கோஷங்களை எழுப்பினர். மேலும், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேரணியை வழிநடத்தினர்.

இந்த விழிப்புணர்வு பேரணி மூலம் பொதுமக்களிடம் வாக்குப்பதிவின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *