மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக வி. என்.கே மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நகராட்சி ஆணையாளர் இரா. அமுதா அவர்கள் தலைமையில், நகராட்சி பொறியாளர்திரு. சரவணகுமார் அவர்கள் முன்னிலையிலும் இந் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர்ரேவதி அவர்கள் விழாவை தொகுத்து வழங்கினார்.

மாணவர்கள் சுதந்திரமான முறையில் அச்சமின்றியும் ,மதம், சாதி, இனம் ,வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என்று “வாக்காளர் உறுதி மொழி” ஏற்றனர். நிகழ்ச்சியில்
கல்லூரி ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *