C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..

கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தொடங்கி வைத்தார்

கடலூர் அண்ணாவிளையாட்டு அரங்கில்,2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில் குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்கு பதிவினை ஏற்படுத்திடும் வகையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பொது மக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி வாயிலாகவும், அதிநவின மின்னனு திரை வாகனங்கள் வாயிலாகவும், கலைநிகழ்ச்சிகள்,பேரணி, மனித சங்கிலி, மினி மாரத்தான் போன்றவை நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


அதனைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நம் வாக்கு நமது உரிமை,என் வாக்கு என் கடமை, மறவாமல் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது உரிமை, வாக்களிப்பது நமது கடமை, 100 சதவீதம் வாக்களிப்போம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் பிரசுரிக்கப்பட்ட பதாகைகள் ஏந்திய வண்ணம் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி நடத்தப்பட்டது. வாக்காளர்கள் அனைவரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் தனது வாக்கினை பதிவுசெய்து ஜனநாயக கடமையினை நிலைநாட்டிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

முன்னதாக கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்புடன் வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைவரும் ஏற்று கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து மூத்தக்குடிமக்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க வகைசெய்திட இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து மூத்த குடிமக்களிடம் அதற்கான ஒப்புதல் மற்றும் விருப்பம் பெறும் வகையில் வாக்காளர் விண்ணப்பங்கள் வழங்கும் பணி நடைபெறுவதனை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் செம்மண்டலம் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி,மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *