​இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
​”புனிதமான ரம்ஜான் மாதத்தில் இறைவனின் கட்டளையை ஏற்று, ஒரு மாதம் முழுவதும் பகல் நேரங்களில் பசியினைப் பொறுத்து நோன்பிருந்து, இரவு நேரங்களில் விழித்திருந்து இறைவனைத் தொழுது வணங்கிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


​வறுமையற்ற ஒரு சமூகத்தை உருவாக்கும் உன்னத நோக்கில், ‘ஸக்காத்’ எனும் ஏழைப் பங்கினை இல்லாதோர்க்கு வழங்கி மகிழ்வது இந்தப் பெருநாளின் சிறப்பம்சமாகும். இத்தருணத்தில், உலகம் முழுவதும் போர் அச்சமற்ற சூழல் நிலவவும், வறுமை ஒழிந்து அன்பு மற்றும் சமாதானம் தழைத்தோங்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வோம்.


​’சமாதானமே சுகவாழ்வு’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நம் அனைவர் மீதும் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலைத்திருக்கட்டும்” என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *