மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்
தென்காசி மார்ச்-21
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இஸ்லாமியர்களின் ஈத் பெருநாள் தொழுகை செங்கோட்டை மஸஜிதுன் நூர் ஜூம்மா பள்ளிவாசலில் தலைமை இமாம் மவுலவி அபூபக்கர் சித்திக் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . செங்கோட்டை தஞ்சாவூர் பள்ளிவாசல் 110 வருட பழமையான பள்ளிவாசல் ஆகும் இப்பள்ளியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்
மிகவும் பழமையான பள்ளிவாசல் என்பதால் இங்கு நடைபெறும் தொழுகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் நோன்பு பெருநாளில் 30 நாட்களும் நோன்பு இருந்து இன்றைய தினம் பெருநாள் தினமாக அனுசரிக்கப்பட்டு காலை 8 மணிக்கு சிறப்பு தொழுகை நிறைவேற்றப்பட்டது
இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு ஏற்பாடுகளை பள்ளிவாசல் தலைவர் முகைதீன் பிச்சை என்ற முதலாளி செயலாளர் திவான் அகமது .ஷா. சேட் துணைத் தலைவர் அக்பர் பாதுஷா பொருளாளர் காதர் மைதீன் கமிட்டி உறுப்பினர்கள் முகமது ஜாபர் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர் தொழுகையின் இறுதியில் சிறப்பு துவா ஓதப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன
இஸ்லாமியர்கள் தொழுகையின் முடிவில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி
ஈத் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.