தஞ்சாவூர். மார்ச்.21.தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) பெரியார் புரா ( PURA )கிராமப்புற மேம்பாட்டு மையம் மற்றும் ஜெய்பூர் ஸ்ரீ பகவான் மகாவீர் விக்லாங் சஹாயதா சமிதி (BMVSS) ஆகியன இணைந்து இலவச செயற்கை கால், கை மற்றும் உதவி உபகரணங்கள் பொருத்தும் முகாம்

நடைப்பெற்றது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) மக்கள் தொடர்புச் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பாளர் மேஜர் டாக்டர் பி.விஜயலட்சுமி வரவேற்புரையா
ற்றினார். பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) பெரியார் PURA கிராமப்புற மேம்பாட்டு மையம் இயக்குநர் டாக்டர் ஆனந்த் ஜெரார்ட் செபாஸ்டின் முகாம் அறிமுகவுரையாற்றினார்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) பேராசிரியரும், துணை வேத்தருமான வி.ராமச்சந்திரன் பேசியதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களை இனம் கண்டு 700 பேர் பதிவு செய்துள்ளார்கள். இதில் முதல் நாளான இன்று 300 பேர் பயன்பெற்றுள்ளார்கள். இதில் செயற்கை கை. செயற்கைகால்களை, பயனாளிகளின் கால் கை அளவை எடுத்து அதற்கு தகுந்தாற்போல் வடிவமைத்து இரண்டு மணி நேரத்தில் பயனாளிக்கு செயற்கைகால் செயற்கை கை பொருத்தப்பட்டுள்ளது.

இதர உறுப்பு கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டுள்ளதோடு ஸ்ரீ பகுவான் மகாவீர் விக்லங் சகாயட்டா சமிட்டி ஜெப்பூர் நிறுவனம் இணைந்து ஒரு சமுதாய நல்லிணக்கம் விழாவாக நடைபெற்றுள்ளது. தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகம் இது போன்ற விழாக்களை நடத்திவருகின்றது என பேசினார். ஜெய்பூர் ஸ்ரீ பகவான் மகாவீர் விக்லாங் சஹாயதா சமிதி புதுதில்லி நிர்வாகக் குழு செயலாளரும்,கட்டிடக்கலைஞ ருமான பிரக்ருதி மேத்தா வாழ்த்துரையாற்றினார்.


ஸ்ரீபகுவான் மகாவீர் விக்லங்கு சமிட்டி ஜெய்ப்பூர் செயலாளர் மேலாண்மைக்குழு மற்றும் புதுடெல்லி கட்டிடக் எழிற்கலை பிரகரத்தி மேத்தா தலைமையில்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) துணைத்துணைவேந்தர் டாக்டர் ஆர்.மல்லிகா, பெரியார் பல்கலைகழக பதிவாளர் டாக்டர் பி.கே. ஸ்ரீவித்யா ஆகியோர்

75 சக்கரநாற்காலிகள்,20 அக்குள் உன்றுகோல்கள், 20 அச்சு ஊன்றுகோல்,75 ஆர்தோடிக்காலிப்பர்ஸ், 120 காதுகேட்கும் கருவிகள்,15சக்கர நடை வண்டி, 65
சக்கர நாற்காலி, 136 செயற்கைகால்கள்,35 செயற்கைகைகள், 26 நான்குகால் நடைத்தடி, 20 பார்வையற்றோர்களுக்கான கைகுச்சி, 20 மாற்றியமைக்கப்பட்ட காலணிகள், 20 முழங்கை ஊன்றுகோல், 50 மூன்று சக்கரவண்டி, 14 வாக்கர் மடிப்பு,
11வாக்கிங் நடைக்குச்சி என மொத்தம் 707 பொருட்களை சுமார் 50 இலட்சம் மதிப்பிலான 707 பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கினார்கள். பெரியார் மணியம்மை அறிவியல்மற்றும்தொழில்நுட்பநிறுவனம்(நிகர்நிலைப்பல்கலைக்கழகம்)
சமூகப் பணி துறைத்தலைவர்டாக்டர் எஸ்.பரமேஸ்வரன்நன்றியுரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் பேரா பொ.விஜயலெட்சுமி, சமூக நலத்துறை இயக்குநர் ஆனந்த ஜெரார்டு செபாஸ்டின் இணை பேராசிரியர் கணினி அறிவியல் துறை பா.இளங்கோவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *