சென்னை,மார்ச் 22
ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பாக பெரம்பூர் பாரதி சாலையில் அமைந்துள்ள சாய்பாபா ஆலயத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் மாநில தலைவருமான மு.ரா அரவிந்தன், மாநில செயலாளர் ரவிசங்கர், மாநில துணை செயலாளர்ஆர்.மாரிதேவி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜி. தினேஷ்குமார், மாநில அமைப்புச் செயலாளர் ஜி.சங்கரன், மாநில பொது செயலாளர் நந்தகுமார், மாநில பொருளாளர் சரத்பாபு , வடசென்னை மாவட்ட தலைவர் அருள்ராஜ் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.