
கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ். பி. வேலுமணியின் பரிந்துரையின் பேரில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அதிமுக வால்பாறை நிர்வாகிகள் தமிழ்நாடு தேயிலை தோட்ட பிரிவு மாநிலத் தலைவர் வால்பாறை வீ. அமீதுவை நேரில் சந்தித்து பொன்னாடை மற்றும் மலர்மாலை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகர மேற்கு பொறுப்பாளர் சலாவுதீன் அமீது, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர் நரசப்பன், நகர அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், மாணவரணி செயலாளர் ஆர். லோகேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்