C K RAJAN
Cuddalore District Reporter
94884 71235…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கணிணி அறையில் 2026- சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களை கணினி வாயிலாக முதற்கட்ட பயிற்சிக்கு ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார், தொடங்கிவைத்தார்.

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார், தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, 2026- சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2590 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு பணியில் ஈடுபத்தப்படவுள்ள அலுவலர்களை முதற்கட்ட பயிற்சிக்கு கணிணி வாயிலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
151-திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 1339 நபர்களும், 152-விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு 1522 நபர்களும், 153- நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு 1229 நபர்களும், 154 – பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு 1482 நபர்களும், 155 – கடலுர் சட்டமன்ற தொகுதிக்கு 1238 நபர்களும், 156 – குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு 1334 நபர்களும், 157 – புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு 1459 நபர்களும், 158 – சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு 1430 நபர்களும், 159 – காட்டுமன்னர்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு 1397 நபர்களும் கணிணி மூலம் முதற்கட்ட பயிற்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

151-திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு திட்டக்குடி ஸ்ரீ ஞானகுரு வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, 152-விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி,153- நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு நெய்வேலி டவுன்ஷிப் ஜவஹர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,154 – பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு பண்ருட்டி ஜான் டூவி தொடக்க பள்ளி,155 – கடலுர் சட்டமன்ற தொகுதிக்கு மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல் நிலைப்பள்ளி 156 – குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு பார்வதிபுரம் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி,157 – புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு குறிஞ்சிப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,158 – சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு அண்ணாமலை பல்கலை கழகம் கே.ஆர்.எம் டெக்பார்க்,159 – காட்டுமண்ணார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு காட்டுமன்னார் கோயில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்,மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருநாவுக்கரசு உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *