திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் காரியாபட்டி கிராமம் அம்மா பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மாயக்காரி மாசாணி அம்மன் கோயிலில் அமாவாசை பூஜையில் அருள் வாக்கு ஸ்ரீ வளர்மதி அம்மாவின் உத்தரவின் படி உலக நலன் வேண்டியும், தற்போது மூன்று நாடுகளான ஈரான், இஸ்ரேல்,அமெரிக்கா போன்ற நாடுகளில் போரின் காரணமாக இன்று வரை அன்றாட தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வணிகரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கான பூஜையில் ஸ்ரீ பரசுராமரை முன்னிறுத்தி,ஸ்ரீ சுதர்சன சக்கரம் வரைந்து 108 யாககுண்ட மூலிகை பொருட்கள் தட்டுடன் போர் நிறுத்தம் வேண்டி சிறப்பான யாக சாலை பூஜைகள் நடைபெறற்றது.
இப்பூஜையில் அமாவாசை அன்று இரவு12 மணிக்கு மேல் மயான பூஜையில் உலகில் எங்கும் காண கிடைக்காத படுத்த நிலையில் உள்ள மயான கருப்பசாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகளும் நடைபெற்றன.