தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்,குண்டடம் பகுதிகளில்பறக்கும்படையினர் நடத்தியசோதனையில்ரூ 1லட்சத்து24 பறிமுதல்.மேலும்கோவில் மணிகளை திருடி வந்த வாலிபரையும் விசாரனைக்கு பின் காவல் நிலையத்தில் ஒப்படைப்படைத்தனர்.
தாராபுரம் அருகே உள்ள குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டடம் 3 சாலை சந்திப்பு அருகே பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒட்டன்சத்திரம் பாப்பம்பட்டிஅ பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் நாட்டு துறை வயது 60. என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரு66ஆயிரம் எடுத்து வந்தார். உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்ரொக்கத்தைபறிமுதல் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 66 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்தனர
இதேபோல் சூரியநல்லூர் கிராமத்தில் மற்றொரு பறக்கும் படை வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்திய போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் இருசக்கர வாகனத்தின் நிறுத்தாமல் சென்றுவிட்டார். பறக்கும் படை அதிகாரிகள் இருசக்கர வாகனத்தை துரத்தி பிடித்து விசாரணை செய்ததில் அவர் உடுமலை பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் 43 என்பதும் அவர் பெல்லம்பட்டி கிராமத்தில் கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அந்தப் பணியின் போது அருகே இருந்த கோவிலில் பூஜை செய்வதற்காக வைத்திருந்த நான்கு கோவில் மணிகளை திருடிக் கொண்டு சூரிய நல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது பறக்கும் படை அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
பறக்கும் படை அதிகாரிகள் தாலுக்கா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டதால் சரவண குமாரை குண்டடம் காவல் நிலையத்தில் பறக்கும்படையினர்ஒப்படைத்தனர்.
கொடைக்காணல் அண்ணா நகர் பகுதியில் பிராய்லர் மொத்த வியாபாரி நடத்தி வருபவர் ரமேஷ் வயது54. இவர் தாராபுரம் சோமன்கோட்டை பிரிவில் உள்ள அவரது வீடு கட்டுமான பணிக்காக காரில் ரொக்கம் ரூ58 ஆயிரம் எடுத்து கொண்டு வந்தார். தேர்தல் பறக்கும் படையினர் கொளத்துப்பாளையத்தில் சோதனையில் 58 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்தனர். 58 ஆயிரம் பணத்தை ஆர் டி ஓ உதவியாளர் சைலஜா படையமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தார்.