தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சார்பில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு பேரவைக் கூடத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் (பொ) குழு உறுப்பினர் முனைவர் பெ.பாரதஜோதி தலைமை தாங்கினார். இலக்கியத்துறை தலைவர் தேவி வரவேற்றார்.பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் வாழ்த்துரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான கு.ஞானசம்பந்தன் கலந்துகொண்டு தமிழர் தந்தை சி.ப ஆதித்தனார் என்ற தலைப்பில் பேசிய போது பாமர மக்களின் சிந்தனையை உள்வாங்கியவர் சி.பா.ஆதித்தனார். மக்களுக்கு புரியும் மொழியில் எழுத வேண்டும். தமிழை கொச்சைப்படுத்தக்கூடாது.

சுருக்கமாக அதுவும் குழப்பம் இல்லாமல் எழுத வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடித்தவர் ஆதித்தனார்மேலும் .தினசரி பத்திரிகையை தொடங்கியபோது காகித பற்றாக்குறை நிலவியது. யாரும் செய்யாத வேலையை ஆதித்தனார் செய்தார். வைக்கோலை வாங்கி வந்து கூழாக மாற்றி காகிதத்தை தயாரித்தார்., ‘தமிழரசுக் கட்சி, நாம் தமிழர் இயக்கங்களைத் தொடங்கி தமிழ் மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார் என்றார்.


தொடர்ந்து காரைக்குடி,விஜய் டிவி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு முதற்கோப்பை வெற்றியாளர்மு ராகவேந்திரன் ஒரு மனிதர் ஒரு பத்திரிக்கை ஒரு புரட்சி என்ற தலைப்பில் பேசிய போது நாளிதழ் துறையில் சி.பா.ஆதித்தனார் ஏற்படுத்திய புரட்சிகளையும், தமிழை எளிய மக்களிடம் கொண்டு சென்ற அவரது முயற்சியையும் நினைவுகூரும் வகையில் அமைகிறது. எழுதப்படிக்கத் தெரியாதவர்களும் படங்களைப் பார்த்தும், தலைப்புகளைப் பார்த்தும் செய்திகளைப் புரிந்து கொள்ளும் ஆர்வத்தை உருவாக்கினார்.எனக் கூறினார். நிறைவில் இணைப் பேராசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள்,
மாணவ ,மாணவிகள் மற்றும் அலுவலக நிலை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *