C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பமுள்ள
முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் 2026 பாதுகாப்பு பணிக்கு காவல்துறையுடன் இணைந்து செயல்பட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பமுள்ள, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதிற்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் ( JCOs & ORs தரத்தினர்) தங்களது முன்னாள் படைவீரர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கடலூர் மஞ்சக்குப்பம் சப் ஜெயில் சாலையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விருப்பம் தெரிவித்து பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 04142 220732 என்ற அலுவலக தொலைபேசி எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.நேரில் வர இயலாத பட்சத்தில் தங்களது விருப்ப கடிதம் மற்றும் ஆவணங்களை கடலூர் முன்னாள் படைவீரர் நல அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவோ (அ) exwelcud@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோருக்கு காவல் துறையினர் மூலமாக தக்க ஊதியம் வழங்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.மேலும் சட்டமன்ற தேர்தல் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்திட காவல்துறையுடன்,முன்னாள் படைவீரர்கள் இணைந்து தங்களது முழு பங்களிப்பினை நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார், தெரிவித்துள்ளார்.