தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் எள் மருந்துசாற்றி திருக்குட நன்னீராட்டு பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது

இதனை யொட்டி தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்று இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு ஸ்பர்சாஹீதி விமானம மற்றும் மூர்த்திகளுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

இதே போல் அருள்மிகு விநாயகர் அருள்மிகு முருகன் அருள்மிகு பைரவர் கோவில் கலசத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்ற முடிந்தது கும்பாபிஷேகத்தின் போது கும்பாபிஷேகம் காண வந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று முழக்கமிட்டது சாமாண்டிபுரம் கிராமத்தையே அதிர வைத்தது இந்த கும்பாபிஷேகத்தில் நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆர் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளி சேர்மன் கல்வி தந்தை ஆர்.ஆர். இராஜாங்கம் திருக்கோயில் நித்திய படி கட்டளை பரம்பரை அறங்காவலர் இ.ஆர் சரவணன் என்ற வா. இலட்சுமணக் குமார் வா வாலசுப்பிரமணிய பிள்ளை அழகு ஜானகியம்மாள் குடும்பத்தினர்கள் ராதா கிளினிக் அதிபர் எம் கோபாலகிருஷ்ணன் ஜீவா பேங்கர்ஸ் அதிபர் ஏ.ஆர்நாகராம பாண்டியன் துணைவியா என். ஜீவா தேனி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கே.வி.பி முருகேசன் கே ஆர் ஜெய பாண்டியன் கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் பி. துர்கா தேவி தேனி சரக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கா கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தக்கார் அ. நதியா மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் ஊழியர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் கம்பம் சாமாண்டிபுரம் ஆங்கூர்பாளையம் மற்றும் கம்பம் புறநகர் பகுதிகைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று அம்மன் அருள் பெற்று சென்றனர் கும்பாபிஷேகத்தை யொட்டி விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் தயிர் சாதம் லெமன் சாதம் வெஜிடபிள் பிரியாணி போன்ற சைவ விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *