துறையூர் மார்ச் -26

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதி-146 க்குரிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. 23-04-2026 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, துறையூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வைப்பறையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டாட்சியர் சிவக்குமார், தேர்தல் வட்டாட்சியர் தேர்தல் வட்டாட்சியர்கள் கோவிந்தராஜ், ராஜவேல் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் (மார்ச் 24) 24. 03. 26 அன்று இரவு 10.30 மணி அளவில் மின்னணு வாக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot unit) – 386 மற்றும் சியுபி 356 பெட்டிகள் Strong Room உள்ளே வைத்து சீல் வைக்கப்பட்டது.

Strong room ஐ பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24மணி நேரமும் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் சமூக நலத்துறை வட்டாட்சியர் பழனிவேல், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் முத்து, தேர்தல் வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம், மற்றும் திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ் குமார், அதிமுக நகர செயலாளர் அமைதி பாலு, காங்கிரஸ் நகர தலைவர் ராமநாதன், பாஜக, தேமுதிக, நாம் தமிழர், விசிக,அமமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

வெ நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *