வடலூர் ராகவேந்திரா சிட்டி மூன்றாம் குறுக்கு தெரு பகுதியில் வசிக்கும் துரை மகன் அரவிந்தன் (34)வடலூர் சத்தியஞான சபைக்கு கடந்த பிப்ரவரி மாதம், இரண்டாம் தேதி வழிபாட்டுக்கு சென்றவர், சபைபகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது அதிர்ச்சி,மோட்டார் சைக்கிளை, காணவில்லை, இதனை தொடர்ந்து, உடனே அவர் வடலூர்போலீசில் புகார் செய்தார்,வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து,வடலூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சேகர்,சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், ஏட்டுகள்பாக்கியராஜ், கார்த்திகேயன் ஆகியோர், கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இவர்கள் வடலூர் சேத்தியாதோப்பு மெயின்ரோட்டில், கருங்குழி செல்லும் வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது,மோட்டார் சைக்கிளில், வேகமாக வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்த போது விசாரணையில் வடலூர் ரயிலடிபகுதியை, சேர்ந்த ஜாபர் அலி மகன் முகமது ரியாஸ் (24) எனவும்,இவர் அரவிந்த் என்பவரின் மோட்டார் சைக்கிள் திருடியதும்,தெரிய வந்தது,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *