பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் திரு. சதிஷ் மற்றும் மதிப்புக்குரிய மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்களின் அறிவுரையின்படி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பாப்பிரெட்டிப்பட்டி மகளிர் திட்ட அலுவலகத்தில் கையில் மெகந்தி வரைந்து 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றனர்
இதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 19 ஊராட்சிகளிலும் மகளிர் திட்டத்தின் மூலமாக கையில் மெஹந்தி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் இதில் மண்டல தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. கோவிந்தன் வட்டாட்சியர் பார்வதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, நீலமேகம், உதவி திட்ட அலுவலர் பாஸ்கர் வட்டார மேலாளர் அருண்குமார் துணை வட்டாச்சியர் சக்திவேல் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ரத்தினவேல் அமிர்தவல்லி நித்யா அருணா கவிப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்