தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் பொது குழு கூட்டம் கோவை உக்கடம் லாரிப்பேட்டை பிலால் நகர் பகுதியில் உள்ள மாவட்ட தலைமையக தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ்,முகம்மது நாசர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இப்பொதுக்குழு நிகழ்ச்சிக்கு மாநில நிர்வாகிகள் தலைமை வகித்தனர்.

மாநில பேச்சாளர் அபூபக்கர் சித்திக் சமுதாயப் பணிகளில் நிர்வாகிகளின் பங்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இஸ்லாமிய மார்க்க பிரச்சாரம் செய்த கிளைகளுக்கும்,சமுதாய நலப் பணிகளில் ஈடுபட்ட கிளைகளுக்கும் மாவட்டத்தின் சார்பாக நினைவு கேடயங்களும் இஸ்லாமிய மார்க்க புத்தகங்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன.

மேலும் SIR நடைமுறை குறித்தும், தமிழக அரசு முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டிய ஏழு சதவீத இட ஒதுக்கீடு குறித்தும் மாவட்ட துணைச் செயலாளர் சல்மான் கான் பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் பேசி ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைத் தலைவர் தாவூத் கைசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.. ‘

SIR’ நடைமுறைகள் குறித்தும் அதில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் எடுத்துரைத்தார்,SIR படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்றும், அலட்சியமாக இருந்து விடக்கூடாது, சமீபத்தில் பீகாரில் சுமார் 45 லட்சம் மக்களின் வாக்குரிமை பறிபோனது மட்டுமல்லாமல் அவர்களின் குடியுரிமையும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்றும்,தற்போது 12 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த SIR நடைமுறைகள் தமிழகத்திலும் வீரியமெடுத்துள்ளது , நிர்வாகிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளைகள் மூலம் முகாம்கள் அமைத்து எந்த ஒரு வாக்காளரின் வாக்குரிமையும் விடுபடாத அளவில் விழிப்புணர்வோடு இருந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க உதவிகள் செய்திட வேண்டும் என்று கூறினார்.

அதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விண்ணப்ப படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது தொடர்பான தகவல்கள், வீடியோக்கள் உள்ளன அவற்றை சமுதாயம் பயன்படுத்திக் கொண்டு வாக்குரிமையை பாதுகாத்திட வேண்டும் என்றும், பிப்ரவரி 2026 இல் முழுமையான வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான அனைவரின் வாக்குரிமையும் பெற்றிடும் வகையில் உழைத்திட வேண்டும் என்றும் கூறினார்.

மாவட்ட பொது குழு கூட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் முஜிபுர் ரஹ்மான் , கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் அபூதாஹீர், துணை செயலாளர்கள் ஹஸ்ஸான், அப்துல் ஹமீது, மருத்துவ சேவை அணி நிஜாமுதீன் மாணவரணி நிர்வாகி சபீக் அலி உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள்,கிளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *