கடலூர் மாவட்டத்தின் மாவட்ட புள்ளிஇயல் கையேடு ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட புள்ளிஇயல் துணை இயக்குநர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டுவருகிறது. இக்கையேட்டில் மாவட்டம் தொடர்புடைய அனைத்து துறைகளில் அளிக்கும் புள்ளிவிவரங்கள், மக்கள்தொகை, மழை புள்ளி விவரங்கள், நீர்பாசன பரப்புகள், வேளாண்மை, கால்நடை, மீன்வளர்ப்பு, பொது சுகாதாரம், மின்சாரம், சுற்றுலா, பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், போக்குவரத்து, தொழில் நிறுவனங்கள். சாலைகள், ரயில்வே போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இக்கையேடு அரசின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்கும், ஆராய்ச்சி மாணவர்களின் பயன்பாட்டிற்கும் பேருதவியாக உள்ளது.
2024-25ஆம் ஆண்டிற்கான மாவட்ட புள்ளிஇயல் கையேட்டினை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 07.11.2025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ., வெளியிட்டார்.
இந்நிகழச்சியில் புள்ளிஇயல் துணை இயக்குநர் வி.முத்துக்குமரன், கோட்ட புள்ளிஇயல் உதவி இயக்கநர் கே.கனகேஸ்வரி, புள்ளிஇயல் அலுவலர் வீ.முரளிதரன் மற்றும் புள்ளிஇயல் ஆய்வாளர் ஞானசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.