C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..

கடலூர் மாவட்டம், மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தலைமையில் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2026-சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகளில் ஈடுபடும்  மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் 

சிபி ஆதித்யா செந்தில்குமார், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

2026-சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கிட தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 151-திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கான 279 வாக்குச்சாவடி மையங்களுக்கு 23 மண்டல தேர்தல் அலுவலர்களும், 152-விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் 317 வாக்குச்சாவடி மையங்களுக்கு 28 மண்டல தேர்தல் அலுவலர்களும், 153-நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் 256 வாக்குச்சாவடி மையங்களுக்கு 21 மண்டல தேர்தல் அலுவலர்களும்,
154-பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடி மையங்களுக்கு 23 மண்டல தேர்தல் அலுவலர்களும், 155-கடலூர் சட்டமன்ற தொகுதியில் 258 வாக்குச்சாவடி மையங்களுக்கு 24 மண்டல தேர்தல் அலுவலர்களும், 156-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் 278 வாக்குச்சாவடி மையங்களுக்கு 25 மண்டல தேர்தல் அலுவலர்களும், 157-புவனகிரி சட்டமன்றதொகுதியில் 304 வாக்குச்சாவடி மையங்களுக்கு 27 மண்டல தேர்தல் அலுவலர்களும், 158-சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 298 வாக்குச்சாவடி மையங்களுக்கு 28 மண்டல தேர்தல் அலுவலர்களும், 159-காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடி மையங்களுக்கு 26 மண்டல தேர்தல் அலுவலர்களும், என மொத்தம் 2590 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட 225 மண்டல தேர்தல் அலுவலர்களுக்கும் தேர்தல் பணிகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மண்டல அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து விதிமுறைகளை பின்பற்றி பணிகளை மேற்கொள்ளவேண்டும். மேலும் தேர்தல் பணிகளில் தகுந்த திட்டமிடுதலுடன் செயல்படவேண்டும்.மண்டல அலுவலர்கள் தங்கள் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், படிவங்கள் பூர்த்தி செய்தல் மற்றும் புள்ளி விவரங்களை அனுப்பும் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் குறித்து முறையான பயிற்சியினை வழங்கவேண்டும்.
மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மின்வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதி செய்யவேண்டும். மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சாய்வுதள வசதி,மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்திட வேண்டும். பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிப்பதற்கு தேவையான வசதிகளை உறுதிப்படுத்திட வேண்டும். வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்குப்பதிவு செய்யும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருநாவுக்கரசு, மண்டல தேர்தல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தேர்தல் திருவிழா , தமிழகத்தின் பெருவிழா

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *