கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் & தமிழ்நாட்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்திருவாரூரில் மே 5ல் நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டிற்க்கான கலந்தாய்வு கூட்டம் தனியார் விடுதியில் கரூரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.. 2026 தேர்தலில் பறக்கும் படை என்ற பெயரில் வணிகர்களை குறிவைத்து தாக்கி கொண்டிருக்கிறார்கள்.

கரூரில் அரிசி மூட்டை ஏற்றி கொண்டு சென்ற லாரியை மடக்கி 1,13000 ரூபாயை எல்லாவிதமான ஆவணங்கள் இருந்தும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இது போல தமிழகம் முழுவதும் வணிகர்கள் பெறும் அளவில் பாதிக்கப்ட்டு உள்ளனர் இதனை கண்டித்து வரும் 31ம் தேதி சென்னையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது.


அனைத்து கட்சிகளிடம் எங்கள் கோரிக்கை பட்டியலை கொடுத்து உள்ளோம்.எந்த கட்சி எங்களின் கோரிக்கைகளை ஏற்று தேர்தல் அறிக்கையில் வெளியிடுகிறதோ அந்த கட்சிக்கு தான் எங்களின் முழு ஆதரவு கொடுப்போம். அதே போல் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பை பொறுத்தவரை யார் தலைமை ஏற்று கூட்டம் நடந்தினார்களோ அவர்கள் தான் அங்கு நடக்கும் அசாம்பவதற்க்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *