தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி, குண்டடம் உள்வட்டத்திற்குட்பட்ட குண்டடம் கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 100% வாக்களிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொதுமக்களிடம் நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் நில வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் குண்டடம் கிராம நிர்வாக அலுவலர் சௌந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி வாக்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
மேலும், “ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தின் வலிமை” என்பதை வலியுறுத்தி, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.