கரூர் செய்தியாளர் மரியான் பாபு

சிஐஐ-ன் 2030க்குள் 50,000கோடி விஷன் விழிப்புணர்வு திட்டம்.. கரூரில், நடைபெற்ற 5, 10 கிலோ மீட்டர் மாரத்தான் மற்றும் 3 கிலோ மீட்டர் அதிவேக நடைப் போட்டியை தொடங்கி வைத்து அதிவேக நடை போட்டியில் பங்கேற்றார்

செந்தில் பாலாஜி கரூரில் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் சங்கம், அனைத்து வணிகா்கள் சங்கம் சாா்பில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் கரூரின் வா்த்தக இலக்கு ரூ.50 ஆயிரம் கோடியை அடையும் வகையில் சிஐஐ-ன் 2030 விஷன் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில் மாரத்தான் போட்டி மற்றும் அதிவேக நடை போட்டி நடைபெற்றது.
கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
மேலும்,3 கிலோ மீட்டர் அதிவேக நடைப் போட்டியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜியும் கலந்து கொண்டு நடந்தார்.

இப்போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் குடிநீர் உள்ள அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பு வசதிகளையும், போட்டிகளை நடத்திய இந்திய தொழில் கூட்டமைப்பு சிஐஐ ஏற்பாடு செய்திருந்தது.

இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, ஆணையர் சுதா,CII சேர்மன் பிரபு, துணை தலைவர் பெருமாள்,YI தலைவர் லோகேஷ், YI துணை தலைவர் சசிகுமார், CII முன்னாள் தலைவர் மற்றும் 2030 Vision தலைவர் பாலசுப்பிரமணியம், கரூர் வர்த்தக சங்க செயலாளர் வெங்கட்ராமன், CII கரூர் செயலாளர் பவித்ரன் சங்க பொருப்பாளர்கள் சுரேஷ், முகமது கமாலுதீன் என பலர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு ரொக்க பரிசு, பதக்கம், சான்றிதழும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *