குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை மானஸா அகாடமி சார்பில் நடைபெற்றது தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வைத்து உடல் உறுப்பு தான விழிப்புணர்வுக்காக இதய வடிவ உலக சாதனை மற்றும் குழந்தைகள் தின நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மானஸா டான்ஸ் அகாடமி நிறுவனர் தனலட்சுமி இரமேஷ் தலைமையேற்றார் நடன இயக்குனர் மாஸ்டர் ஜானி, விஜய் டிவி புகழ் பழனி, ராபா மீடியா நிறுவனர் பிரசன்ன ராமானுஜம், புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னருக்கு ஏடிசி முத்துக்குமார்,ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
சிறப்பு விருந்தினராக மாநகர மேயர் சண்.ராமநாதன்,துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பாரத் கல்லூரி தலைவர் புனிதா கணேசன், ஷட்டில் யுனிவர்சிட்டி வீரர் பாலாஜி அருணாச்சலம், டாக்டர். உஷா நந்தினி மணிராம், ஜி என் டி பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார்கள் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் குறித்து 300க்கும் மேற்பட்டோர் இதய வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து உலக சாதனை செய்தனர் .
மேலும் குழந்தைகள்தின விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் சிலம்பம், கரகாட்டம்,யோகா, ஆடல் பாடல் பாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவர்களின் மாணவர்கள் உடல் உறுப்பு தானத்துக்காக தன் உடல் அர்ப்பணித்து சாகசம் நடனாடினார்கள். இதில் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மற்றும் மாணவ , மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.