கோவை மாவட்டம் வால்பாறை நீதிமன்றத்தில் பார்கவுன்சில் உறுப்பினர் தேர்தல் இன்று நடைபெறுகிறது இத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சுமார் 1 லட்சத்து 540 வழக்கறிஞர்கள் வாக்களிக்க உள்ள நிலையில் 143 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர்

இதில் ஒருவர் சுமார் 23 வாக்குகளை பதிவு செய்ய உள்ள நிலையில் வால்பாறை நீதிமன்ற நீதிபதி மீனாட்சி நேரடி பார்வையில் வாக்குப்பதிவு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கிஷோர் குமார், ரமேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையிலிருந்த பேலட் பாக்ஸ் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு ஆய்வு மேற்கொண்டு சீல் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது

அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது வாக்கு பதிவிற்கு முன் அடையாள அட்டையில் உள்ள க்யூ ஆர் கோட் ஸ்கேனிங் செய்து உறுதிசெய்யப்பட்ட பின்பு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது

மேலும் முதன் முறையாக மகளிருக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வழக்கறிஞர் சங்க தலைவர் ஷாநவாஸ் கான், சங்கச்செயலாளர் பெருமாள், துணைத்தலைவர் பால்பாண்டி, பொருளாளர் முருகன் வழக்கறிஞர்கள் வினோத்குமார், விஸ்வநாதன் மற்றும் பலர் வாக்களித்து வருகின்றனர் இத் தேர்தலுக்கு வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
30.06.2026

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *