பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணிளினி விடுத்துள்ள அறிக்கையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தொகுதி II & IIA முதன்மைத் தேர்வுகளுக்கான 645 பணிகாலியிட அறிவிக்கைகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்(12.11.2025) இவ்வலுவலகத்தால் நடத்தப்பட உள்ளது. 2024-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற TNPSC GROUP II & IIA தேர்வில் பெரம்பலூர் மாவட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்று 8 மாணவர்கள் வெற்றி பெற்று தற்போது அரசுப்பணியில் பணியாற்றி வருகின்றனர்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த TNPSC Group II&IIA முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முதன்மை தேர்வு எழுத பயிற்சி பெற ஆர்வமுள்ள மாணவர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல், பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும்.

இலவச இப்பயிற்சி வகுப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் , மாதிரி தேர்வுகள் முடிந்தவுடன் வினாக்கள் குறித்து குழு விவாதம் மற்றும் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் , போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் பிரத்யேக இணையதளமான Virtual Learning Portal-ல் போட்டித்தேர்வு ஆர்வலர்களுக்கு பதிவு செய்து தரப்படும். போட்டித்தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி. என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, போட்டித்தேர்வில் ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *