திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் 2,40,000 வாக்காளர்கள் உள்ளனர் இங்குள்ள 344 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தேர்தல் அலுவலர் சுரேஷ் மேற்பார்வையில் திருவொற்றியூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மநாபன் உதவி தேர்தல் அதிகாரிகள் மதனகோபால், பிரபு, அர்ஜுன், திலீப் துணை தாசில்தார் சோபியா மற்றும் குமரேசன் ஆகியோர் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் முதற்கட்டமாக 826 வாக்குச்சாவடி அலுவலர்கள் பங்கேற்றனர் முகாமில் வாக்குப்பதிவு இயந்திரம் கையாளும் முறை குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது