கரூர் செய்தியாளர் மரியான் பாபு மழலையர்க்கு பட்டமளிப்பு விழா..

கரூர் மாவட்டம் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி பயிலும் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.

இதில் மழலையர் வகுப்பைச் சார்ந்த 14 குழந்தைகளுக்கு பட்டம் வழங்கபட்டது. விழாவில் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வட்டார வளமைய மேற்பார்வையாளர்செல்வகுமார்,பள்ளி தாளாளர் சிலம்பண்ணன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழையும், பரிசுகளையும் வழங்கினர்கள்.


இவ்விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற திலகவதி வரவேற்புரையாற்றினார்.ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தமிழ்ச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். விழா நிகழ்வுகளை ஆசிரியர்கள் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரேவதி,புவனேஸ்வரி, மனோன்மணி, சாந்தி,அன்புக்கரசி சுதா, தனலட்சுமி, சமீம் சோபியா மேரி நிர்மலா, ரெனிடா ஆகியோர் செய்திருந்தனர்.


கணிதப் பட்டதாரி ஆசிரியர் ராமலக்ஷ்மி நன்றியுரையாற்றினார்.பின்னர் மாணவ,மாணவியர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர்.பின்பு அனைவருக்கும் பரிசுகளும், பாராட்டு சான்றிதழும் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *