திருச்சி தாயுமான சுவாமி திருக்கோவில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நீராழி மண்டபத்தில் தூய்மை பணி நடைபெற்றது.


திருச்சிராப்பள்ளி தாயுமான இறைவன் ஆலயம் ஸ்ரீ மட்டுவார்குழல் நாயகியுடன் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தாயான செல்வர் ஆலயத்திற்குச் சொந்தமான பிரம்மதீர்த்தம் எனப்படும் இத் தெப்பக்குளம் கரிகால் வளவன் ஆகிய சோழ மன்னனால் கி.பி.முதல் நூற்றாண்டில் தோற்றுவிக்கப் பெற்றது. இத் திருக்குள நீராழிமண்டபம் இந்நகரை ஆட்சி புரிந்த விஸ்வநாத நாயக்கரால் கி.பி.1546ல் கட்டப்பெற்றது.

இதில் ஆண்டுதோறும் பங்குனித்திங்கள் பூரம் நாளன்று தெப்பத் திருவிழா நடைபெறும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தாயுமான சுவாமி திருக்கோவில் உதவி ஆணையர் செயல் அலுவலர் அனுமதியுடன் திருக்கோவில் பேஸ்கர்,மா-காவிரி தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.எஸ்.என்.பத்ரி நாராயணன்,திருமதி காஞ்சனா தேவி, கே.பி.பத்மகிருஷ்ணன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்,ஆயிர வைசிய மஞ்சபுத்தூர் மகா சபை
,ராதாகிருஷ்ண மாதர் பஜனை மண்டலி, ராதா கிருஷ்ண மகளிர் சங்கத்தினர், சிவனடியார்கள் மற்றும் திருக்கோவில் ஊழியர்கள் பலர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *