கோவைக்கு வருகை புரிந்த தேசிய தலைவர் தேவர் பெருமான் திரைப்பட குழுவினர்

முன்னாள் அமைச்சர் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி படக்குழுவினரை சந்தித்து பாராட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு “தேசியதலைவர் தேவர் பெருமான்” எனும் திரைப்படமாக வெளி வந்து உலகம் முழுவதும் திரையரங்குளில் ஓடி வருகிறது..

இந்நிலையில் கோவைக்கு தேசியதலைவர் தேவர் பெருமான்” திரைப்படத்தில் நடித்த பஷீர் மற்றும் இயக்குனர் அரவிந்தராஜ் உட்பட திரைப்பட குழுவினர் வருகை புரிந்தனர்

திரைப்பட குழுவினரை வரவேற்கும் விதமாக கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தேவர் சமூக கூடத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது விழாவிற்கு வருகை புரிந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி திரைப்பட குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்..
முன்னதாக கோவை சுந்திராபுரம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு கூட்டாக மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் திரைபடத்தின் தயாரிப்பாளர் SSR சத்தியா, தேவர் பெருமானராக நடித்த நடிகர் பஷீர், மற்றும் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த ஊமைவிழிகள் திரைபடத்தை இயக்கிய, இயக்குனர் அரவிந்த் ராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்..

அப்போது பேசிய குழுவினர் தேவர் ஐயாவின் படத்தை எடுத்ததில் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி எனவும்,இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர் குறிப்பாக படத்தில் நடித்த இஸ்லாமியரான பஷீர் தேவர் ஐயாவாகவே வாழ்ந்துள்ளதாக தெரிவித்த குழுவினர் இந்த படத்திற்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்தனர்..

இந்த நிகழ்ச்சியை அ.தி.மு.க குறிச்சி பகுதி செயலாளர் செந்தில்குமார் மற்றும் குறிச்சி தேவர் சமூக சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *