2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை செய்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சு.சுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயம் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி,: பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கூடிய அளவிற்கு நிறைய பேர் தங்கி இருக்கக்கூடிய இடங்கள், வேலைப்பார்க்ககூடியவர்கள் தங்கி இருக்கக்கூடிய இடங்கள், வணிகரீதியிலான சிலிண்டர்கள் உபயோகப்படுத்தும் இடங்கள், இவை எல்லா இடத்திலும் சிலிண்டர் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், அவர்கள் சிலிண்டரை வாங்கியும் எவ்வித லாபமும் அடைய முடியாமல், தங்களுடைய தொழிலை நடத்துவதற்கே கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது; மேலும், சிலிண்டர் விலை ஏற்றுமாக உள்ளது.

ஒன்றிய அரசாங்கம், அப்படி எதுவுமே நடக்கவில்லை நடக்கவில்லை என சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். இவற்றை கட்டுப்படுத்த மக்களுக்கு கிடைக்கூடிய அளவில் மக்கள் கஷ்டப்படாமல் இருக்கும் அளவில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அவர்கள் போர்சூழலை கணக்கில் கொண்டு தயாரான சூழலை உருவாக்க வேண்டும் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்று பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *