கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த வேட்பாளர் சபரி கார்த்திகேயன், தேர்தலை முன்னிட்டு பல்வேறு சமூக அமைப்புகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு குரும்பர் பழங்குடி முன்னேற்ற சங்க தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி அவர்களை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில், மரியாதை நிமித்தமாக சந்தித்து, வரவிருக்கும் தேர்தலில் ஆதரவு வழங்குமாறு சபரி கார்த்திக் கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, குரும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, குரும்பர் சமூக மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வேன் என்றும் சபரி கார்த்திகேயன் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின் போது தி.மு.க.நிர்வாகிகள் அட்சயா நாகராஜ்,ஏர்போர்ட் ராஜேந்திரன் மற்றும் மதுக்கரை நகர நிர்வாகிகள் இ.பி.ராஜேந்திரன்,.ராம்ஜி,சல்மான்,பொறியாளர் ஆர்.கே.ரவிக்குமார்,தேவராஜ்,ராயப்பன்,உட்பட பலர் உடனிருந்தனர்…