தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026ஜ முன்னிட்டு தேனி அல்லிநகரம் நகராட்சியில் வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்டத் தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்து தேர்தல் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி நகராட்சி பொறியாளர் குணா என்ற குணசேகரன் நகராட்சி மேலாளர்கள் ஜெயந்தி முனிராஜ் சுகாதார அலுவலர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்