செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மேற்கு மாவட்ட பாஜகவின் சார்பில் , மாதவரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மாதவரம் மூர்த்தி அறிமுக விழா செங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளை சார்ந்த ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனர் .இதில் மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் சென்னை சிவா , குமரன் அருண்குமார், மற்றும் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.