திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத்திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர்.சரவணன், பங்குனி உத்திரத் திருத்தேரினை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மரு.பிரதீப்,பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர்.மாரிமுத்து மற்றும் அறங்காவலர்கள், முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.