கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில், உள்ள சிந்தி சிஹார்பூர் பேங்கர்ஸ் அசோசியேஷன் திருக்கோவில் சார்பாக, கோடை வெயில் காலத்தை முன்னிட்டு அனைத்து பொதுமக்களுக்கு ம் இலவச நீர் மோர் வழங்கும் சேவை துவங்கப்பட்டது..

கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில், கடந்த 90 ஆண்டுகளாக சிந்தி சிஹார்பூர் பேங்கர்ஸ் அசோசியேஷன் எனும் திருக்கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த திருக்கோவில் சார்பாக சிந்திஸ் ஆப் கோவை எனும் பெயரில், கடந்த 5 ஆண்டுகளாக கோடை காலத்தில் அனைத்து பொதுமக்களுக்கும் இலவச நீர் மோர் வழங்கபட்டு வருகின்றது. இதன் 6வது ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதனை சிந்திஸ் ஆப் கோவை அமைப்பின் தலைவர்கள் தினேஷ் மைனானி,தீபக் உத்மானி, ஆகியோர் துவக்கி வைத்தனர்.. இதனை தொடர்ந்து இது குறித்து சிந்திஸ் ஆப் கோவை அமைப்பின் செயலாளர் கிரண் பஞ்சாபி, செய்தியாளர்களிடம்

கூறியதாவது..
கடந்த 5 ஆண்டுகளாக கோடை வெயிலை தனிக்கும் வகையில் அமைப்பின் சார்பாக, அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் இலவச நீர்மோர் வழங்கி வருகின்றோம். இதன் தொடர்ச்சியாக இன்று நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி உள்ளதாகவும் தினமும் 1000 முதல் 1500 நபர்கள் வரை நீர்மோரை பருகி செல்வதாகவும், இந்த சேவையை தொடர்ந்து 60 நாட்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த சேவை அளிக்க எங்களுக்கு உதவியாக இருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிந்திஸ் ஆப் கோவை அமைப்பின் நிர்வாகிகள், பிரேம் மைனானி, சுனில் டுக்ரேன், பகவான் தாஸ், ராகுல் மத்திஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *