தாராபுரம் சேத்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் அருகே மாணவி விஷம் குடித்து உயிரிழப்பு: சிகிச்சை பெற்ற ஊர்காவல் படை வீரரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு.
தாராபுரம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த மணிகண்டன் (34), ஊர்காவல் படையில் பணியாற்றி வந்தார். இவர் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தளவாய்பட்டினம் பாப்பையன் புதூர் பகுதியில் வசித்து வந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ரவீந்திரன் (35), தனது மனைவி ஆனந்தி மற்றும் மகள்கள் கீர்த்தனா, யுவஸ்ரீ (15) ஆகியோருடன் தாராபுரத்தில் வசித்து வருகிறார். கொடைக்கானலில் இருந்த காலத்தில் இரு குடும்பங்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
யுவஸ்ரீ அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பள்ளிக்கு சென்ற அவரை மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் குண்டடம் அருகே உள்ள முத்தூர் பிரிவு பகுதியில் இருவரும் விஷ மாத்திரை உட்கொண்டு மயங்கி கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி யுவஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.