தூத்துக்குடி புதிய தமிழகம் கட்சி யாரையும் நம்பி இல்லை மக்களை நம்பி உள்ளது கூட்டணியில் இருந்திருந்தால் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருப்போம் ஆனால் தற்போது 10 முதல் 15 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற அவலங்களை எடுத்துரைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார் இதைத் தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு விமான நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்

தமிழகத்தில் நல்ல ஆட்சி அமைய வலுவான கூட்டணி அமைய முயற்சி எடுத்தும் அந்தக் கூட்டணிக்கு தலைமை தாங்கியவர்கள் தங்களுடைய கடமையை உணர்ந்து சரிவர பொறுப்புணர்ந்து செயல்படாத காரணத்தினால் கூட்டணி அமையாமல் போய்விட்டது புதிய தமிழகம் கட்சி யாரையும் நம்பி இல்லை மக்களுடன் இணைந்து இருக்கிறோம் 70 சட்டமன்ற தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சியின் அவலம் குறைபாடு சுட்டிக்காட்டி கனிம வள கொள்கை தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டு அதிக அளவில் நடந்துள்ளது பெண்கள் எந்த கிராமத்திற்கு சென்றாலும் டாஸ்மாக் மூட மாட்டீர்களா மதுக்கடைகளை மூட மாட்டார்களா என்று கேள்வி கேட்கிறார்கள் மதுக்கடைகளை மூடுவதற்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்பப்படும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடி ஊழியர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூபாய்ர 10 லட்சம் இருக்கிறதா 15 லட்சம் இருக்கிறதா என்று பணத்துக்காக அரசு பணிகள் எல்லாம் விலை பேசப்படுகிறது இதை எதிர்த்து நாம் சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம் மக்களிடம் உண்மையாக இருப்போம் மக்கள் எங்களை வெற்றி பெற வைப்பார்கள்

கூட்டணியில் இருந்திருந்தால் இரண்டு தொகுதிகளில் இருந்த வெற்றி வாய்ப்பு தற்போது 10 15 தொகுதிகளில் உள்ளது வருகிற ஆறாம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளோம்

மக்களுடைய அழைப்பின் பேரில் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் ஓட்டப்பிடாரத்தில் போட்டியிடுகிறேன் வெற்றி நிச்சயம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *