மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே பெட்டதாபுரம் ஸ்ரீசக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் இன்விக்டஸ் 2கே26 விழா கல்லூரியின் சேர்மன் தர்மலிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் விளையாட்டு போட்டிகளுடன் தொடங்கியது.விழாவிற்கு கல்லூரியின் தலைவர் கார்த்திகேயன்,இணை தலைவர் அகிலேஸ்வரன்,செயலாளர் புனிதவள்ளி,இணை செயலாளர் வித்யாஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் முதல்வர் ஜெயப்பிரகாஷ்,தலைமை நிர்வாக அதிகாரி பிரசன்னன், டீன் மலர்விழி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.நேற்று நடைபெற்ற விழாவில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்,கல்வி,மருத்துவம் உள்ளிட்ட 15 வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் மற்றும் கல்லூரி கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் டிசிஎஸ் நிறுவனத்தின் உயரதிகாரி சுசீந்திரன்,அர்ஜுனா விருது பெற்ற தேசிய தடகள வீரர் எல்டோஸ் பால்,நடிகைகள் அபர்ணா தாஸ்,பிரார்த்தனா நாதன்,பிக் பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து இன்விக்டஸ் 2கே26 விருது வழங்கி கெளரவித்தனர்.

இவ்விழாவில் கல்லூரி மாணவ,மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள்,பேராசியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *